Saturday, August 12, 2017

பரந்தாமனுக்கே பதங்கள்

       ||ஸ்ரீ மதே இராமானுஜாய நம||

"ஏகம் ஏவம் அத்வித்யம்", ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்தே நாஸ்தே கின்ஜன்’ என்றெல்லாம் வேதசாஸ்திரம், பிரம்மசூத்திரம் இறைவன் ஏகஸ்வரூபன் எனச்சொல்கையில்  நாராயணனை  மட்டுமா  சொல்கிறது  சிவனையும் பிரம்மனையும்   வேறு தேவதையையும்  சொல்லுகிறது  எனவே அனைத்து கடவுளும் ஒன்று
என்கிறார்கள் .குறிப்பாக
நாராயணனா ருத்ரனா  யார் பரம்பொருள்  என்று சர்ச்சை வருகிறது  அந்த சர்ச்சைகளை நீக்கும்படி இக்கட்டுரை உதவுமென நம்புகிறேன்.

வேத வேதந்தங்களில்  சொல்லப்படும் பரப்ரஹ்மம் ஒன்றே , ஈஸ்வரர்கள் பலர் இருக்க முடியாது , மேலும் நாராயணன்,விஷ்ணு,புருஷன் ,ஹரி , அனந்தன்  ஸத், ப்ரஹ்ம , ஆத்மா , அக்ஷரம் ,ஆகாசம்  ப்ரஹ்மா இந்திரன்  முதலிய சப்தங்களால்  பரப்ரஹ்மம்  குறிப்பிடப்படுவதால் அனைவரும் பரப்ரஹ்மமாக இயலாது. "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி"
என்றபடி மேற்கண்ட சப்தங்களால் குறிப்பிடப்படுபவன் ஒருவனேயாகவேண்டும் .

இலக்கணப்படி  பரம்பொருள் நாராயணன்  என கொண்டால்  மற்ற  சப்தங்கள் யௌகிகமாக  நாராயணனை  சொல்லுகிறதென்றும் ,ருத்ரன் என்று கொண்டால் நாராயணாதி  நாமங்கள்  அனைத்தும் சிவனை யௌகிகமாக சொல்லுகின்றன  என் கொள்ளவேண்டும். நாராயணாதி சப்தங்கள் அனைத்தும் விஷ்ணுவை முக்கியமாக (ரூடி )கொண்டவை . சிவாதி நாமஒழ் ருத்ரனை முக்கியமாக (ரூடி )  கொண்டவை ,எனவே ரூடியை தள்ளிவிட்டு யௌகிகமாக  பொருள்கொண்டே தீரவேண்டும் .

"சிவ",  "ப்ரஹ்மா"  சப்தங்களை  நாராயண பரமாக பார்த்தால் "மங்களமானவன் " "பெரியவன் "என்று பொருள் வரும் , இவ்வாறு  நாராயண  சப்தத்தினை "நாரங்களுக்கு அயனமாய் உள்ளவன்"  என யௌகிகப் பொருள் கொண்டு சிவனுக்கோ  பிரமனுக்கோ  பார்த்தால் , நாராயண  சப்தத்தில் உள்ள 'ணத்வம்' பாதிக்கிறது .
"பூர்வபதாத்   ஸம்ஜ்ஞாய மக :" என்னும் பாணினி ஸூத்ரப்படி  "நாராயந :"
(  நாரங்களுக்கு அயனமாய் உள்ளவன்) என்னும் பொருளுடைய  பதம் , அப்பெயரால் ஸுப்ரஸித்தனான விஷ்ணுவைக்குறிக்கும்போது "நாராயண" என மாறும்.

அப்பதம் வேறு எவரையும் குறிக்கவேண்டுமெனில்   "நாராயந:" என்றே கிடக்கும் . "நாராயண :"   என்றிருந்தால் விஷ்ணுவைத்தவிர வேறு எவரையும் குறிக்காது . வேதத்தில் காரணபுருஷனைச் சொல்லும் பற்பல வேதவாக்கியங்கள்  "நாராயண:" என்று பிரயோகம் காணப்படுகிறதே ஒழிய "நாராயந:" என்று எங்கும் காணப்படுவதில்லை , எனவே "நாராயண:" நாமத்தை வேறு ஒருவருக்கு  பரமாக்குவது இயலாது .

" ந து நாராயணாதீநாம் நாம்நாமந்யத்ர
ஸம்பவ:
அந்யாம்நாநாம் கதிர் விஷ்ணு:ஏக ஏவ ப்ரக்கீர்த்தித:
ருதே நாராயணாதீநி நமாநி புருஷோத்தம:
ப்ராதாதந்யந்ர பகவாந்"

நாராயணன் முதலிய பெயர்கள் மற்ற தெய்வங்களை குறிக்க மாட்டா. மற்ற தெய்வங்களின் பெயரும் விஷ்ணு ஒருவனுக்கே சேருமிடமாக கீர்த்தி பெற்றுள்ளது. நாராயணன் முதலிய பெயர்களை தவிர மற்ற தெய்வங்களின் பெயர்களை புருஷோத்தமனே பிறருக்கு தந்தருளினான். எனும் வாமனபுராண வசனமும் அந்நியாயத்திற்கு ப்ரமாணம்.

மேற்காணும் விதிப்படி 'ஏகோ  ஹி ருத் ரோ ந த்விதீயாய  தஸ்து '
(ருத்ரன் ஒருவனே;இரண்டாவதாகைக்கு ஒருவரும் இல்லை)என்றும்
,'சிவ ஏவ  கேவல'
(சிவன் ஒருவனே இருந்தான் )என்றும்,
'ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே'
(ஹிரண்யகர்ப்பனே (பிரமன் )முதலில் இருந்தான் என்ற வாக்கியமும்  நாராயணனை(விஷ்ணுவை)குறித்தே வருகிறது. இதற்கு பரீக்ஷயமான சான்றாய் விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் ருத்ரன், சிவன் நாமங்கள் வருகிறதேயல்லாமல் சிவசஹஸ்ரநாமத்தில் விஷ்ணு, நாராயணன் பெயர் இடம்பெறவில்லை
இதன் மூலம் நாராயணனே பரப்ரஹ்மம்  என்றும் அவனாலேயெ உயர்கதியான மோக்ஷத்தை அளிக்கமுடியுமெனவும் வெள்ளிடைமலைபோற் றெள்ளிதின் விளங்கக்  அறியலாம் .

7 comments:

  1. ஆயிரம் பொய் கூறினும் சிவபிரானின் பரத்துவத்தை சிறிதும் அடர்த்துவிட முடியாது.
    சிவ ஏவ கேவல என்றும் சிவ ஏகோத்யேய என்றும்
    சிவம் சதுர்த்தம் என்றும் சிவோ வேதம் சிவோ குரு என்றும் வேதங்கள் கூக்குரலிட்டும் உங்கள் மரமண்டைகளுக்கு அது ஏறாது.

    ReplyDelete
  2. சிவபிரானின் பெயர்கள் சிவபிரானுக்கே உரியவை அவை வேறு ஒருவருக்குச் சொல்லப்படுமாயின் அது வெறும் உபசாரமே ஆகும்.

    ReplyDelete
  3. விஷ்ணு ,என்றும் ராமாய என்றும்
    விஷ்ணுவல்லபன் என்றும் விசுவேசுவரன் என்றும் சிவசகஸ்ரநாமங்கள் வருகிறதை சிறிதும் அறியாது பொய் கூறுவது பொருந்தாது.

    ReplyDelete
  4. சிவபிரானைக் கண்டவாறு நிந்தித்து பொய்க்கதைகள் பலவற்றை எழுதிவிட்டு பின் வேதங்கள் சிவநாமம் கொண்டு பரத்துவம் சாதிக்கும் போது அப்போது மட்டும் சிவநாமம் விஷ்ணுவைக் குறிக்கும் என்பது பொருந்தாப் பேச்சு.

    ReplyDelete
  5. ஒருவனே பரம்பொருள் அவனே சிவன்.அவனுக்கு
    சமமான தேவதை உலகிலில்லை.கருணையின் வடிவமவன்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
    Harrah's Cherokee Casino & 경주 출장샵 Hotel is one 과천 출장샵 of the largest 구미 출장샵 gaming, dining and entertainment, 구미 출장마사지 gaming, shopping and more 전라남도 출장샵 at the Cherokee

    ReplyDelete

சரபேஸ்வர இடம்ப திக்காரம்

தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று வழங்கப்படும் ஆதிகாலத்தில் பாரததேச மக்கள் வேதமார்க்கத்தினின்றும் முறைதவறாமலிருந்தனர். அக்காலத்த...