அக்காலத்தில் பரமபுருஷனுடைய பரத்துவதிற்கு எதிரம்புகோத்தவர்கள் எவருமில்லர். சிலகாலத்திற்கு பின் ருத்ரனிடம் பக்ஷபாதமுள்ள சிலர் ருத்ரனுக்கு பெருமைச் சொல்லிப்பாடி வந்தனர். எனினும் கூட பரமபுருஷனுடைய பெருமைகளை ஒளிக்காமல் பேசி வந்தனர். மற்றும் ருத்ரனுக்கு உள்ள தாழ்வுகளை மறைத்து "எல்லாம் ஒன்றுதான்" என்றுகூறி ஆறுதலுமடைந்தனர்.
எங்குமே பாடியதில்லை.
அடியார்களுக்கு அருள்செய்யவோ, திருவிளையாடல்களைப் புரியவோ இல்லாது நாராயணனது அவதாரங்களை தாக்கி, அழிப்பது ஒன்றையே குறியாய் கங்கணம் கட்டி ருத்ரன் எடுத்த கங்காள மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, கூர்ம சம்ஹாரமூர்த்தி, வராஹ சம்ஹாரமூர்த்தி போன்ற அவதாரங்களைப்பற்றி
எங்குமே பாடியதில்லை. இவை மட்டுமல்லஅடிமுடிதேடியகதை, கண்ணைப்பிடிங்கி அர்சித்து சக்கரம்பெற்றகதை முதலான
பாஷாண்டப்பொய்புராண கதைகளை
தமிழிலக்கியங்களிலோ,
திருவள்ளுவர், இளங்கோ, போன்ற இடைக்கால புலவர்களினதும் காளிதாஸன் போன்ற இடைக்கால சிவபக்தர்களின் நூல்களிலேயோ சல்லடை போட்டுத்தேடினாலும் கிடைக்காது.
எளிதில் புலனாகும். இவ்வுண்மைகளை
கண்டுபொறாத சில சைவர்கள் சரபக்கதைக்கு பலப்ரமாணம் உண்டு, ஆகையாலது உண்மையென ஆகாசத்தாண்டவமாடுவர். இனியவ்வாட்டத்தை அடக்கி அப்பாஷாண்டக்கதை அநாதரிக்கதக்கது எனக்காட்டுவோம்.
ஸஹஸ்ரகரஜைஸ்த்ரஸ்த: தஸ்ய கா
த்ராணி பீடயந்!!
தத: ஸ்புரச்ச டாசோடோ ருத்ரம் ஸரபரூபிணம்!
வ்யதாரயந்நகை ஸ்தீக்ஷ்ணை ஹிரண்ய கசிபும் யதா!!
நிஹதே ஸரபேதஸ்மிந் ரௌத்ரே மது நிகாதிநா!
துஷ்டுவு: புண்டரீகாக்ஷம் தேவா: தேவர்ஷயஸ்ததா!!””
என ஸாத்வீக(பகுதி)புராணங்கள்
சிவ, லிங்க, ஸ்கந்த போன்ற தாமஸபுராணக்கதையை நிரசித்து விட்டன. அடுத்ததாய் நரசிம்ஹத்தை சரபம் கொன்றதை நாயன்மார்கள் பாடல்களில் காணலாம் ஆனால் சரபத்தை நரசிம்ஹம் ஹிம்சித்ததாய் ஆழ்வார்கள் பாடல்களிலில்லை. ஆகவே அது பொய்யென
சில சைவர்கள் வாதம் வைக்கின்றனர்.
ஸா மோஹிநீ ந கத்மஸ்ய து ஹந்த ஜந்தோ|
ஹை மாத்யஸிம்ஹவபுஷ்ஸ தவ தேஜஸோமஸே ஸமபுர பவந ஹி ஸலபோ ஸபூவ ||
மாயையெனும் பிரகிருதி எவனைத்தான் மயக்காது? நரசிம்ஹ உருவங்கொண்ட தேஜஸ்ஸின் ஒரு பகுதியில் சரபவுருக்கொண்ட சிவன் விட்டில்பூச்சி போல பட்டொழிந்தானன்றோ!
இதெற்கெல்லாம் மேலாக சரபம் நரசிம்மத்தை ஹிம்சித்தமை சரபஉபனிஷத்தில் உள்ளது.
ஆனால் சரபத்தை நரசிம்ஹம்
ஹிம்சித்ததாய் ஒருவுபனிஷதுமில்லை என்று ஸாதிப்பர். அதை விளக்குவோமினி.
உபநிஷதங்களுள்
நரசிம்ஹதாபனீய உபநிஷத்தில் நரசிம்மருடைய பெருமைகள் விஷேஷமாக விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 'ம்ருத்யும்ருத்யும'
என்ற மந்திரபதத்தை விவரிக்கும்போது
என பூர்வதாபினியில் உத்கோஷிக்கப்
பட்டது. உத்தரதாபினியில் இரண்டாவது கண்டத்தில் இறுதியில்
இவ்வாக்யங்களால் பக்தர்களின் ஸம்ஹாரபந்தத்தையும், அகாலமரணத்தை போக்குபவனும்
எப்போதும் இருப்பவனாய், எப்போதும் பங்கப்படாதவனாய், தமோகுணம், மயக்கமற்றவாய் என்றும்
உள்ளவனே நரசிம்ஹன் என ஓருபனிஷத் ஓத, அதற்கு வ்ருத்தமாய் அந்தநரசிம்ஹத்தையே சரபம் கொன்றதாக இன்னொருபனிஷத் ஓதுவதை பார்க்கும்போது இது வேதத்திற்கே விழைந்த நிந்தனையாகும். வேதங்களோ, உபனிஷதுக்களோ எப்போதும் முரணாயமையாது என்ற ஞாயத்தால் நிச்சயமாய் இவ்விருவுபனிஷத்துள் ஒன்று பக்ஷபாதத்தாள் செய்யப்பட்ட புனைவாகவே இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டுகொள்வது எனின் காலநிர்ணயத்திலேயாகும். இவ்விருவுபனிஷத்தில் எது சுமார் 500வருடத்துற்கு முற்பட்டதோ, எதை அம்மதஸ்தர்களோ, அல்லது த்ரிமதஸ்தர்களோ கையாண்டுள்ளனரோ அதுவே காலத்தால் முந்தையதாகும். மற்றையது மதாபிமானத்தால் பிற்காலத்தால் செய்யப்பட்ட கற்பிதமெனவும், அறிவுடைய வைதீகர்கள் அதை தள்ளுவதே தக்கதாகும்.
வாக்கியத்திலும் ஆதிசங்கராச்யாரால் வ்யாக்யானமும் செய்யப்பெற்றதும் இன்னும் பல மஹாச்சார்யர்கள் இவ்வுபனிஷத்தை கையாண்டுள்ளனர். ஆனால் தற்காலச்சைவர்கள் கூறும் சரபஉபநிஷத்தை சுமார் 500வருடங்களுக்குமுன் அம்மதஸ்தர்களே கையாளவில்லை. எவ்வாறிதைஅடித்துச் சொல்கிறோமெனில் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தசிவாச்சார்யார், அப்பையதீக்ஷதர் போன்றார் சிவபரம்ஸாதிக்க இயற்றிய ஸ்ருதிஸூக்தமாலை, நீலகண்ட பாஷ்யம், சிவதத்துவ விவேகம், சிவார்க்கமணி தீபிகை போன்ற எந்த நூல்களிலும் சைவர்கள் கூறும் 'சரபஉபனிஷத்'தவிற
காலாக்னிருத்ரோபனிஷத்,
தட்சிணாமூர்த்தி, பஞ்சப்பிரம்மம்
ருத்ரஹ்ருதயம், பிருஹஜ்ஜாபாலம்,
பஸ்மஜாபாலம், மண்டலப்பிராம்மணம்,
ஜாபாலம், துரீயாதீதம், பரமஹம்ஸம், போன்ற என்பதற்கும் மேற்பட்ட உபநிஷத்துள் ஒருவாக்யத்தைகூட சல்லடைஇட்டு தேடினும்கிடைக்கவே கிடைக்காது.
மேல்நாம்கண்ட நரசிம்ஹதாபனீயுபநிஷதுக்களில் பற்பல விஷ்ணுபரமான வாக்யங்களை எடுத்தும் சிவபரமான வாக்யங்களையாங்கு தொடுத்தும் விட்டனர். இதிலிருந்து சைவர்கள் தம்சுயநலத்திற்காக இறைவனளித்த வேதத்தில்கூட திருட்டத்தனம் செய்திருப்பதும்,செய்து கொண்டிருப்பதும், செய்வதும்
புலனாகிறது. ஆகையால் சிவதத்வவிவேகிகளான ஹரதத்தர், அப்பையதீக்ஷதர் போன்றோர் சிவனே பரதெய்வம் என பறைசாற்றுவதற்கு ஸ்வேதாஸ்வேதர், மஹோபனிஷத், அதர்வசிரஸ் போன்ற உபநிஷதுக்களை வைத்து முட்டிமோதியதேன்? சிவனே மும்மூர்திகளையும் கடந்த நான்காவது பொருளான பரதெய்வம். விஷ்ணு பஸ்மமணிந்து சிவனடியாராய் இருக்கும் சைவனெனும் சரப, பஜ்மாஜாபல உபநிஷத்தின் ஓரே வாக்யம் போதுமே.பஸ்மம், ருத்ராக்ஷமே வைதிகமெனும் பஜ்மாஜாபலம், பிருஹஜ்மாஜாபலம், காலாக்னிருத்ரம்,ருத்ராக்ஷஜாபல வசனங்களே போதுமானதே. இவற்றிலிருந்து ஓர் வசனமும் அவர்கள் கையாளாததேன்? அவர்கட்கு உபநிஷத்புலமை போதாதென்பரோ? தம்ஸாதகத்திற்காக ஆமாமென்பினும் ஆச்சர்யதக்கதல்ல.
எழுதினார்களேயொழிய அதற்கு வேதப்ரமாணமாக சரபஉபநிஷத்தை கையாளவேயில்லை என்பதிலிருந்து இவ்வுபநிஷத்து சைவபிரியர்களால் கற்பனையால் வரையப்பட்டதே
என்பது ஸ்பஷ்டம்.
சைவர்கள் இச்சரபவிருத்தாந்தத்திற்கு
யஜூர்வேத தைத்ரியஆரண்யகத்தில் மூன்றாம் ப்ரசன்னம் பதினைந்தாம் அனுவாகதொடக்கத்தில்
'ஹரிம் ஹரந்தம்நுயந்தி தேவா|
விஸ்வஸ்யேஸாநாம வ்ருஷபம் மதீநாம||'
என்று வரும் வாக்யத்தை ஆதாரமாகக்காட்டுகின்றனர்.இதற்கு அவர்கள் கூறும் பொருளாவது சிங்கவுருவமான ஹரியை ஸம்ஹரிப்பவனும் உலகிற்கு ஈஸ்வரனும் அறிவாளிகளின் தலைவனான சிவனை
தேவர்கள் பின்பற்றுகின்றனர். என்பதாம்.ஆனால் அப்பொருளில் இருதோஷங்கள்
உள்ளன.
(ஒரே வேற்றுமையை உடையவனாகக்)
கொள்ள இடமிருக்கும்போது வ்யதிகரணங்களாகக்
(வெவ்வேறு வேற்றுமையை உடையவனாகக்) கொள்ளுவது நியாயமன்று என்பது வடமொழியிலக்கணத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நியாயத்தைக் கொண்டு பார்க்கையில் 'ஹரந்தம்'- (பிரமன், ருத்ரன் முதலியனைவரையும்)
ஸம்ஹரிப்பவனும்
'விஸ்வஸ்ய ஈஸாநாம'- உலகிற்கு ஈஸ்வரனும் 'மதீநாப வ்ருஷபம்'- அறிவாளிகளின் தலைவனுமான 'ஹரிம'-ஹரியை, 'தேவா'-தேவர்கள், 'அநுயந்தி-பின்பற்றுகின்றனர் என்று பொருள்கொள்வதே நியாயமென விளங்கும். 'ஹரிம் ஹரந்தம்'என்று ஹரி சப்தத்திற்கு வயுத்பத்திபண்ணிக் கொடுக்கிறப்படி
'ப்ரஹ்மாணமிந்த்ரம ருத்ரம ச யமம வ்ருணமேவ ச|
நிக்ருஹய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோசயதே||'
ஸாத்வீகபுராண வாக்யங்களுக்கும் இப்பொருளே பொருந்தியிருக்கும். சைவர்கள் கூறும் பொருள் முற்கூறிய நியாயத்திற்கு பொருந்தாததாகையாலும்
முன்னெடுத்து ஸ்ருதி, ஸ்மிருதி, ஸாத்வீகபுராணங்களுக்கு வ்ருத்தமாகையால் எடுத்துக்கழிக்கவும் தக்கதன்று.
சப்தத்தை மாத்திரம் பிரயோகித்தால், சதபதப்ரஹ்மாணாதிகளிலே பாபம் நீங்கப்பெறாதவனாய், காமவஸ்யனாய் ஒதப்படும் சிவனை சொல்கின்றதென எவராவது நினைத்துவிடப்போகிறார்களோ என்றே 'பதிம் விஸ்வஸ்யே ஆதமேஸ்வரம்நாராயணம்'
(உலகிற்குப் பதியாயிருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனுமான நாராயணன்) என்று நாராயணவல்லியில் லோகேஸ்வரனாக ஓதப்பட்ட நாராயணனே இவன் என்று காட்டுப்படுகிறது 'விஸ்வஸ்ய ஈஸாநம' எனும்பதம். ஆகையால் இங்கு சிவநாமம் இருப்பதாக வாதிடுவது பகற்கனவேயாகும். இவ்விரண்டு தோஷங்களாலும் சைவர்
ஏற்றப்பார்க்கும் பொருள் பொருந்தாமல் விபரீதமாய் வைஷ்ணவ ஸாதகமாய் பொருள்பயந்து நின்றது.
தாமஸ புராணகதைகளும், பொய்யுபனிஷத்தும் நமது
நரசிம்ஹதாபனீயோபநிஷத்,
ஸாத்வீக(பகுதி)புராண வாக்யங்கள் முன் பரிதிகண்டபனிபோல் பட்டொழிந்து போனது.